வியாழன், 25 மார்ச், 2010

விலக்கி விடு போதையை...

You are person read this...

மது தரும் மயக்கமெல்லாம்
விதி செய்யும் வேலையென்று
சதி செய்யும் உன் வாழ்க்கை
சாவிற்கே கொண்டு செல்லும்
கதியென்று மதுவை நினைத்திராதே
காவும் நோய்க்கு ஆளாகாதே
கனவுக்கான உன் போதை
கலக்கத்தை உண்டு பண்ணும்
போதை தன்னில் நீ மீண்டால்
பூமி தன்னில் நீ உயர்வாய்!

பல காலமாய் நீ சேர்த்த
பல நூறு நன்மைகள் தானும்
சில நாழிகைக்குள்
சிதைவுறாமலிருக்க
சிந்தித்து நீ பார்த்தால்
சிதையாது உன் வாழ்க்கை!
அலைமோதும் மனம் தன்னில்
விலையாக ஏன் போதை....?
எதிர்பார்ப்புக்கள் நிறைந்த
உன் வாழ்வு
எரிந்து போக விடலாமோ?

விரும்பாதே போதையை
வெறுப்பாகிப் போகும்
உன் வாழ்வு
கரும்பாக உன் மனத்தைக்
கட்டி நீ வைத்திருந்தால்
காலமெல்லாம்
இவ் உலகம் உன் காலடியில்!

சூரியனாய் நீயிருந்தால்
சுற்றி வரும் பல கோள்கள்
சுழன்று போகாமல் உன் மனதை
விலங்கிட்டுக் காத்திருப்பாய்
விலகும் உன் துயரெல்லாம்
துலங்கும் உன் பெயர் கூட...!

அல்லல்ப்படும் வாழ்க்கைக்குப்
போதை அது வழியல்ல!
புரிந்து கொள் உன் வாழ்வை
தெரிந்து விடும் உன் பாதை!
விரும்பி அதை வெறுத்துவிடு
விளையும் வெளிச்சம்
உன் வாழ்வில்!

3 கருத்துகள்:

Tamilan சொன்னது…

Hi,

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.tamildaily.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.tamildaily.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

உங்கள் நண்பர்களுக்கும் இத் தளத்தை அறிமுகம் செய்து வையுங்களேன்...

ரவிசாந் சொன்னது…

என்னையும் இணைத்துக் கொண்டதற்கு நன்றி அண்ணா. நான் எனது பதிவை உங்களது இணையத்தளத்தில் பதிவு செய்துள்ளேன்.

பனித்துளி சங்கர் சொன்னது…

அருமையான சிந்தனை . பகிர்வுக்கு நன்றி . தொடர்ந்து எழுதுங்கள் !